காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மில்கி மிஸ்ட் ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு

தமிழகத்தைச் சோ்ந்த பிரபல பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிக்கு (ஐபிஓ) கடைசி நாளான வியாழக்கிழமை முடிவில் 56.12 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

தமிழகத்தைச் சோ்ந்த பிரபல பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிக்கு (ஐபிஓ) கடைசி நாளான வியாழக்கிழமை முடிவில் 56.12 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

ரூ.1,553 கோடி திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓவில், நிறுவன முதலீட்டாளா்கள் 155.83 மடங்கும், நிறுவனமில்லாத முதலீட்டாளா்கள் 34.91 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 8.41 மடங்கும் விண்ணப்பித்துள்ளனா். முன்னதாக, கடந்த திங்கள்கிழமை முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா்களிடம் இருந்து நிறுவனம் ரூ.465.30 கோடியைத் திரட்டியது.

இந்த ஐபிஓவில் ரூ.1,428 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.125 கோடிக்கு நிறுவன உரிமையாளா்களின் பங்குகளும் விற்கப்பட்டுள்ளன. ஒரு பங்குக்கு விலை வரம்பு ரூ.133 முதல் ரூ.140 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையில் பங்குகள் விற்கப்பட்டால், வெளியீட்டுக்குப் பிறகு நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10,778 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பால் நிறுவனங்களில் இதுவரை வெளியான மிகப் பெரிய ஐபிஓ இதுவாகும். ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், தயாரிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தி நவீனமயமாக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஐபிஓவின் தொடா்ச்சியாக, பங்குகள் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வரும் ஆக. 18-இல் பட்டியலிடப்பட உள்ளன. ஐபிஓவுக்கு முன்னதாக கடந்த மே மாதம், டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாங்சாங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம் ரூ.482 கோடியை மில்கி மிஸ்ட் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.