விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

உக்ரைனில் ஆலையைச் சீரமைக்கும் பணியில் ஆர்சிலர் மிட்டல்!

உக்ரைனில் உள்ள தனது எஃகு ஆலையின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 13 தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் காயமடைந்தனர்.

Published On :

புதுதில்லி: உக்ரைனில் உள்ள தனது எஃகு ஆலையின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 13 தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக தெரிவித்தது. இந்நிலையில், ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை வகுத்து வருவதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.

இந்த தாக்குதலால், உலை சார்ந்த முக்கிய உற்பத்தி வசதிகள் சேதமடைந்தன. இதனால் ஆலையின் உற்பத்திப் பணிகள் பகுதியளவு நிறுத்தப்பட்டன. தற்போது, ​​சேதத்தின் அளவு மற்றும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான காலக்கெடு குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் உயிரிழந்ததாகவும் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது.

தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவசரக்கால நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Summary

Arcelor Mittal said the company is working on strategies to restore operations at its steel plant in Ukraine which was hit by a missile strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.