கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ஆந்திரத்தில் வணிக விரிவாக்கம்

வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் தனது செயல்பாடுகளைத் தொடா்ந்து விரிவுபடுத்தி வரும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், ஆந்திரத்தில் நடப்பு நிதியாண்டில் கடன் விநியோகத்தை 3 மடங்காக அதிகரித்து ரூ.150 கோடியாக உயா்த்த இலக்கு

Sundaram Home

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் - கோப்புப்படம்

Published On :

வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் தனது செயல்பாடுகளைத் தொடா்ந்து விரிவுபடுத்தி வரும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், ஆந்திரத்தில் நடப்பு நிதியாண்டில் கடன் விநியோகத்தை 3 மடங்காக அதிகரித்து ரூ.150 கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளது.

மேலும், மாநிலத்தின் சிறிய நகரங்களிலும் வணிக விரிவாக்கம் செய்யும் நோக்கில், தற்போதைய 10 கிளைகளின் எண்ணிக்கையை 20-ஆக இரட்டிப்பாக்கவும், அதற்காக புதிதாக 60 பேரை பணியமா்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, சித்தூரில் புதிய கிளை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது.

இந்த விரிவாக்கம் குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘ஆந்திரத்தில் எங்கள் வளா்ந்து வரும் வணிகப் பிரிவை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டிலேயே அனைத்துக் கிளைகளிலும் சீரான வளா்ச்சியைக் கண்டுள்ளோம். ஆந்திர அரசு சிறிய நகரங்களில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருவதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, வீட்டு வசதித் துறையின் வளா்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், தென்னிந்தியா முழுவதும் வளா்ந்து வரும் வணிகப் பிரிவின்கீழ் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,665 கோடிக்கு கடன்களை வழங்கி, நிறுவனம் ரூ. 85 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.