விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஜூன் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.8% அதிகரித்து ரூ. 3,846.28 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

Grasim Industries Ltd

Published On :

புதுதில்லி: பல்வேறு வணிகப் பிரிவுகளில் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.8 சதவீதம் அதிகரித்து ரூ. 3,846.28 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

அல்ட்ராடெக், ஆதித்யா பிர்லா கேபிடல் மற்றும் ஆதித்யா பிர்லா ரினியூவபிள்ஸ் ஆகிய ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 2,770.63 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

2027 நிதியாண்டின் ஜூன் காலாண்டில், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸின் செயல்பாடு வருவாய் 21.43 சதவீதம் அதிகரித்து ரூ. 48,716.20 கோடியாக இருந்தது. பல்வேறு துறைகளில் பரவியுள்ள அதன் வணிகப் பிரிவுகளின் சிறப்பான செயல்பாடே இந்த வருவாய் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

வருவாய் வளர்ச்சி மற்றும் பல்வேறு வணிகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனுக்கான ஒதுக்கீட்டிற்கு, முந்தைய லாபம் 26 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக ரூ. 8,077 கோடியாக இருப்பதாக கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது.

ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் செலவுகள் 19.62 சதவீதம் அதிகரித்து ரூ. 43,851.12 கோடியாக இருந்தது. இக்காலாண்டில் கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் செல்லுலோசிக் ஃபைபர் வணிகப் பிரிவின் வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ. 4,530.25 கோடியாகவும், வேதிப்பொருள் பிரிவின் வருவாய் 10.43 சதவீதம் அதிகரித்து ரூ. 2,639.92 கோடியாக இருந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட், பிர்லா ஓபஸ் மற்றும் பிர்லா பிவோட் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டுமானப் பொருட்களின் வணிகப் பிரிவின் வருவாய் 21.5 சதவீதம் அதிகரித்து ரூ. 28,835.40 கோடியாக உயர்ந்தது.

அல்ட்ராடெக் சிமெண்டின் மொத்த விற்பனை அளவு 41.3 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 12.2 சதவீதம் அதிகமாகும். ரெடி-மிக்ஸ் கான்கிரீட் விற்பனை அளவு 18 சதவீதம் அதிகரித்தது. ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இன்சுலேட்டர்கள் உள்ளடக்கிய அதன் பிற வணிகப் பிரிவுகளின் வருவாய் 30.16 சதவீதம் அதிகரித்து ரூ. 1,126.15 கோடியாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில், கிராஸிம் லிமிடெட் பங்குகள், ரூ. 3,304 என்ற விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.