தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

ஒரே நாளில் ரூ.1,125 கோடி கடனுதவி! இந்தியன் வங்கி பிரமாண்ட கடன் முகாம்!

இந்தியன் வங்கியின் பிரமாண்ட கடன் முகாமில் ஒரே நாளில் ரூ.1,125 கோடி கடனுதவிக்கு ஒப்புதல்...

இந்தியன் வங்கியின் பிரமாண்ட கடன் முகாம்

இந்தியன் வங்கியின் பிரமாண்ட கடன் முகாம் - x page

Published On :22 ஆகஸ்ட் 2026, 10:46 am IST

சென்னையில் நடைபெற்ற இந்தியன் வங்கியின் சில்லறை வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பிரமாண்ட கடன் முகாமில் ரூ.1,125 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் சென்னை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் சில்லறை வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கான கடன் வழங்கும் முகாம், சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்தியன் வங்கியின் சென்னை மண்டல வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, மற்றும் சில்லறை வணிகம், சிறு, குறு தொழில் பிரிவுக்கான தலைமைப் பொது மேலாளர் தலைமையில், இந்த கடன் வழங்கும் முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கடன் பெற விண்ணப்பித்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்.

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதிலும், சில்லறை வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் துறைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் வங்கி கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த முகாம், வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) எனும் தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்த முகாமில், ரூ. 2,080 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் ரூ.1,125 கோடிக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரே நாளிலேயே ரூ. 575 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மொத்தம் ரூ. 207 கோடி கடன்களுக்கான ஒப்புதல் கடிதங்களை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி 46 பயனாளிகளுக்கு வழங்கினார்.

Summary

Rs 1125 crore loan single day Indian Bank mega loan camp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.