தவறான விளம்பரங்கள் குறித்து உணவு நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்!
பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விற்பனையில் ஈடுபட்ட முன்னணி நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FSSAI - கோப்புப் படம்
புதுதில்லி: பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விற்பனையில் ஈடுபட்ட நெஸ்லே இந்தியா, பெப்சிகோ மற்றும் கோகோ-கோலா இந்தியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், முன்னணி நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை எஃப்எஸ்எஸ்ஏஐ பகிர்ந்துள்ளது.
தவறான விளம்பரங்கள், பொய்யான கூற்றுகள் மற்றும் லேபிளிங் விதிமீறல்கள் காரணமாக 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்தது. அதே வேளையில், நடவடிக்கைக்கு உள்ளான சில முக்கிய நிறுவனங்களின் பட்டியலையும் ஆணையம் பகிர்ந்துள்ளது.
நெஸ்லே இந்தியா, பெப்சிகோ, அபோட் இந்தியா லிமிடெட், ரெட் புல் இந்தியா, டானோன் இந்தியா, மான்ஸ்டர் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹெல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், மாண்டலெஸ் இந்தியா, கோகோ-கோலா இந்தியா, டியாகியோ, பெர்னோட் ரிக்கார்ட், ஃபெரெரோ இந்தியா மற்றும் கென்வ்யூ இன்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் மீறியதற்காகப் பல்வேறு உணவு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ள நிலையில், எனர்ஜி பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது இந்த ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதே வேளையில், சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விளக்கிய எஃப்எஸ்எஸ்ஏஐ, விதிமீறல்கள் காரணமாகப் பல நிறுவனங்களின் தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ், பீட்சா ஹட், டொமினோஸ் மற்றும் கோஸ்டா காபி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உணவுச் சேவை நிறுவனங்களும், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு 12 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அமேசானின் ஒரு கிடங்குக்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Summary
Food regulator FSSAI informed that it has issued 150 notices to food companies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







