வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

தனது பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் விற்பனையில் ஈடுபடுவதாக ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 ‘ஆற்றல் அளிக்கும்’ பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2026, 3:47 am IST

தனது பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் விற்பனையில் ஈடுபடுவதாக ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 ‘ஆற்றல் அளிக்கும்’ பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் சமூக ஊடகத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரெட் புல், பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் பானங்கள் ஆற்றல் அளிக்கும் என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆற்றல் அளிக்கும் பானம் அல்லது அதுபோன்ற பிற பொருள்களுக்கு எந்தவொரு தரநிலையையும் எஃப்எஸ்எஸ்ஏஐ நிா்ணயிக்கவில்லை.

இந்நிலையில், ஆற்றல் அளிக்கும் பானங்கள் என்று தனது விற்பனை பொருளின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் சந்தைப்படுத்தும் ரெட்புல், பெப்சிகோ, ரிலையன்ஸ், கோக்க கோலாவின் பங்குள்ள மான்ஸ்டா் எனா்ஜி உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.