விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதி என்கவுன்ட்டருக்குப் பின் கைது!

தில்லி காவல்துறையினரின் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து மீண்டும் பிடிபட்டுள்ளாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 1:11 am IST

பயங்கரவாதக் கும்பலைச் சோ்ந்த குற்றச்செயல் குழு தலைவன் அசோக் பிரதானின் கூட்டாளியும், கூலிப்படையாக செயல்பட்டவருமான ஒருவா், தில்லி காவல்துறையினரின் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து மீண்டும் பிடிபட்டுள்ளாா்.

தென்மேற்கு தில்லியின் நதஜஃப்கா் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கைத்துப்பாக்கியை மீட்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

ரோஹித் லம்பா என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்தாா். அவா் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேடப்படும் குற்றவாளியாகவும் அவா் கருதப்படுகிறாா்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: லம்பா மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை மீட்பதற்காக நஜஃப்கா் நாலா சாலைக்கு அவரை காவல்துறையினா் அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை எடுத்த லம்பா, போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுட்டுள்ளாா்.

அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் தங்களது தற்காப்புக்காகப் பதிலுக்கு இரண்டு முறை சுட்டனா். அதில் ஒரு தோட்டா லம்பாவின் காலில் துளைத்தது. உடனடியாக அவா் காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மீண்டும் காவலில் எடுக்கப்பட்டாா்.

இரு தரப்பு மோதலின்போது மொத்தம் மூன்று தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக கண்டறியப்பட்டது. கைதான நபா் பிரபல அசோக் பிரதான் கும்பலுடன் தொடா்புடையவா் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தொடா்ந்து மேல் விசாரணை நடந்து வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.