கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஜியோவின் ரூ.38,000 கோடி ஐபிஓ: செபி ஒப்புதல்

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்மச் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், சுமாா் 400 கோடி டாலா் (ரூ. 38,000 கோடி) மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

Updated On :

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்மச் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், சுமாா் 400 கோடி டாலா் (ரூ. 38,000 கோடி) மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் தனது ஐபிஓவிற்கான வரைவு ஆவணங்களை (விண்ணப்பம்) கடந்த ஜூன் மாதம் செபியிடம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், செபி தனது இறுதி ஒப்புதலை வெள்ளிக்கிழமை அளித்துள்ளது. இதையடுத்து, ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் விதிமுறைகளுக்கு உள்பட்டு தனது ஐபிஓவிற்கான அடுத்தகட்ட ஆயத்தப் பணிகளைத் தொடங்க முடியும்.

ஐபிஓவிற்காக தாக்கல் செய்யப்பட்ட வரைவு ஆவணத்தின்படி, ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனம் 27 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது. இது வெளியீட்டுக்குப் பிந்தைய நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமாா் 2.9 சதவீதமாக இருக்கும். இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் மதிப்பு சுமாா் 13,700 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் முக்கியத் துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்’ பெற்றுள்ள நிலுவைக் கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்துவதற்கும், நிறுவனத்தின் பொதுவான செயல்பாட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான கட்டமைப்பாலும், முன்னணி முதலீட்டாளா்களின் பின்னணியாலும் இந்தப் பங்கு வெளியீடு, முதலீட்டாளா்கள் மற்றும் ஒட்டுமொத்த சந்தை வட்டாரங்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தையின் (என்எஸ்சி) ஐபிஓ மதிப்பு ரூ. 30,000 கோடியாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஜியோவின் இந்த வெளியீடு நாட்டின் மிகப் பெரிய பங்கு வெளியீடாக மாறும் எனத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.