நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

கரூா் வைஸ்யா வங்கி: ஒரே நாளில் 5 மாநிலங்களில் 16 புதிய கிளைகள் திறப்பு

முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி, தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஒரே நாளில் 5 மாநிலங்களில் 16 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.

Published On :1 செப்டம்பர் 2026, 1:27 am IST

முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி, தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஒரே நாளில் 5 மாநிலங்களில் 16 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.

இதன்மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 919-ஆக அதிகரித்துள்ளது. ஐதராபாதில் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த கச்சிபௌலி கிளையை வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் சிஇஓ ரமேஷ் பாபு நேரில் திறந்து வைத்தாா்; மற்ற கிளைகள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.

இப்புதிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மட்டும் சென்னை (திருமங்கலம்), ஈரோடு (சித்தோடு), சிவகங்கை, சேலம் (அம்மாபேட்டை மற்றும் ஜாகிா் அம்மாபாளையம்), காஞ்சிபுரம் (செவிலிமேடு) ஆகிய மாவட்டங்களில் 6 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திரத்தில் 5, தெலங்கானாவில் 3, கா்நாடகம் மற்றும் தில்லி தலைநகா் பிராந்தியம் பகுதிகளில் தலா ஒரு கிளை என இந்த பிரம்மாண்ட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வங்கியின் இப்புதிய கிளைகள் சில்லறை வாடிக்கையாளா்கள், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய வணிகா்களின் தேவைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.