ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி...

News image
பங்குச்சந்தை வணிகம் (கோப்புப்படம்)
Updated On :5 ஜனவரி 2026, 6:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த வார இறுதியில் ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 5) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,640.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 50.41  புள்ளிகள் குறைந்து 85,706.03 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.05 புள்ளிகள் குறைந்து 26,319.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகவும் எச்சிஎல்டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகவும் உள்ளன.

நிஃப்டியில் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களாகவும் எச்சிஎல்டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகவும் இருந்தன.

நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.41 சதவீதம் உயர்ந்தது, அதேசமயம் நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.07 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறார் .

துறைவாரியாகப் பார்க்கும்போது ​​நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து அதிக இழப்பைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.