

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,459.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 160.16 புள்ளிகள் அதிகரித்து 82,073.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72.85 புள்ளிகள் உயர்ந்து 25,230.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது.
தொடர்ந்து இன்று குறைவான புள்ளிகள் வித்தியாசத்திலேயே ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. நேர்மறையுடன் வர்த்தகம் நிறைவு பெறுமா என்பது வார்த்தக நேர இறுதியில்தான் தெரிய வரும்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30 பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. ஐசிஐசிஐ வங்கி மட்டும் சரிவில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸில் எடர்னல், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், பிஇஎல், டாடா ஸ்டீல், இண்டிகோ, எம்&எம், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி, கோடக் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை 0.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயர்ந்து அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.57 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்துள்ளன.
துறைவாரியாக நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்ந்தது. நிஃப்டி பார்மா, ஆட்டோ குறியீடுகள் தலா 1.8 சதவீதமும் ஐடி குறியீடு 1 சதவீதமும் லாபத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நேட்டோவில் கிரீன்லாந்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியதால் ஐரோப்பிய நாடுகள் மீது வரிவிதிப்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து உலகளவில் பங்குச்சந்தை வர்த்தகம் முன்னேற்றம் கண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.