

சென்னை: தங்கமா, வெள்ளியா எது இன்று விலை அதிகமாக உயர்ந்தது என்று பந்தயம் வைக்கும் அளவுக்கு, போட்டி போட்டுக் கொண்டு நாள்தோறும் விலை நிலவரங்கள் இருக்கின்றன.
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (ஜன.10) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டுமே உயர்ந்துள்ளன.
இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,03,200க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.12,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.7000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.275க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் முறையாக, 2025ஆம் ஆண்டு டிச. 15ஆம் தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட்டது. அது முதல் அவ்வப்போது ஒரு லட்சத்துக்கும் கீழ் சற்று குறைவது, மீண்டும் ஏறுவது என தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த வாரம் நிலவரம்
சென்னையில் தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்தது.
தொடர்ந்து, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,750-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 2,000-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,800-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2,400-க்கும் விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.12,900 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.