

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,435.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 669.21 புள்ளிகள் குறைந்து 82,907.03 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 199.05 புள்ளிகள் குறைந்து 25,484.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
எல்&டி, பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் , அதானி போர்ட்ஸ், எடர்னல், பிஇஎல், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், இண்டிகோ ஆகியவை சென்செக்ஸில் அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும்; இவற்றின் பங்குகள் 1 சதவீதம் வரை சரிந்தன.
மறுபுறம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு தற்போது 1.35 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 1.70 சதவீதமும் சரிவுடன் உள்ளன.
துறைகளைப் பொருத்தவரை நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு அதிகபட்சமாக 1.6 சதவீதமும் பார்மா குறியீடு 0.97 சதவீதமும் ஆட்டோ குறியீடு 0.6 சதவீதமும் ஐடி மற்றும் வங்கி குறியீடுகள் தலா 0.5 சதவீதமும் சரிந்தன.
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இந்த வாரமும் சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.