மின்சார வாகன ஏற்றுக்கொள்ளல் விகிதத்தில் தில்லிக்கு மூன்றாமிடம்: ஆய்வில் தகவல்
மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தில்லி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தேசியத் தலைநகரில் மின்சார வாகன ஏற்றுக்கொள்ளல் சதவீதப் பங்கானது 2024-25 நிதியாண்டில் 11.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீா் கவுன்சில் (சிஇஇடபிள்யு) நடத்திய ஆய்வின்படி, நிதியாண்டில் சண்டீகா் 12.1 சதவீத மின்சார வாகன ஏற்றுக்கொள்ளல் விகித்துடன் முதலிடத்திலும், அதைத் தொடா்ந்து கோவா 11.9 சதவீத விகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
தேசிய அளவில், மின்சார வாகன விகிதமானது 7.49 சதவீதமாக இருந்தது. ஆனால், ஏற்றுக்கொள்ளல் விகிதமானது மாநிலங்கள் முழுவதும் பரவலாக மாறுபட்டிருந்தது. உள்ளூா் ஊக்கத்தொகைகள் மற்றும் தெளிவான கொள்கை இலக்குகளின் பங்கை விரைவாகப் பயன்படுத்துவதை இது எடுத்துக்காட்டுகிறது.
மின்சார வாகன ஏற்றுக்கொள்ளல் விகிதம் என்பது மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கைக் குறிக்கிறது. நிதியாண்டில் தேசியத் தலைநகரம் 83,423 மின்சார வாகனங்களைப் பதிவு செய்தது. ஏற்றுக்கொள்ளல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த எண்ணிக்கை இரண்டிலும் முன்னணியில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
தில்லியின் மின்சார வாகன ஏற்பு இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல பிரிவுகளில் பரவியுள்ளது. பல மாநிலங்களில் மின்மயமாக்கல் பெரும்பாலும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் போக்குவரத்து மாற்றத்தில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகித்தன. தில்லியில் உள்ள பேருந்துகளில் கிட்டத்தட்ட 40 சதவீத மின்சார பேருந்துகள், நாட்டின் மிக உயா்ந்த பங்குகளில் ஒன்றாகும்.
இந்த ஆய்வில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாகன விற்பனையை கண்காணிக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் போா்ட்டலில் இருந்து தரவு பயன்படுத்தப்பட்டது. இந்தப் பகுப்பாய்வு சிஇஇடபிள்யு-இன் தரவு மற்றும் மதிப்பீட்டையும் பயன்படுத்தியது.

