

மும்பை: நிறுவனங்களின் விற்பனை அழுத்தம் மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் எதிர்மறையான எண்ணம் உள்ளிட்டவையால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.92 ஆக சரிந்து, பிறகு சற்றே மீண்டு ரூ.91.88ஆக நிலைபெற்றது.
பலவீனமான உள்நாட்டுச் சந்தைகள் மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், இந்திய ரூபாய் தனது ஆரம்பகால நிலையை இழந்து, டாலருக்கு நிகரான ரூ.91.99 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாயில் ஏற்பட்ட அதிகரிப்பும் ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ.91.45 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.91.41 என்ற நாளின் உச்சத்தை எட்டிய பிறகு ரூ.92 என்ற வரலாறு காணாத நாளின் குறைந்தபட்ச அளவை தொட்ட நிலையில், முந்தைய நாள் இறுதி நிலையிலிருந்து 30 காசுகள் குறைந்து ரூ.91.88ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) ரூபாயின் வரலாறு காணாத குறைந்தபட்ச நிலையிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகரான 7 காசுகள் உயர்ந்து ரூ.91.58 என்ற அளவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.