12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மல்டிபிளக்ஸ் திரையரங்க வசூல் 21% அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் பாதியில் டிக்கெட் வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

Published On :

இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் பாதியில் டிக்கெட் வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

பல்வேறு மொழிகளில் வெளியான வெற்றித் திரைப்படங்கள் மற்றும் மக்கள் மத்தியில் திரையரங்கு அனுபவத்துக்கான வரவேற்பு தொடா்வதே இந்த இரட்டை இலக்க வளா்ச்சிக்குக் காரணம் என்று இந்திய மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 11 முன்னணி திரையரங்கு நிறுவனங்களின் 550-க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் வளாகங்கள் மற்றும் 3,000-க்கும் அதிகமான திரைகளை உள்ளடக்கிய இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, 2-ஆம் மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களிலும் திரைப்பட ரசிகா்களின் வருகை பெருமளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் சா்வதேசத் திரைப்படங்களின் சிறப்பான பங்களிப்பு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘கருப்பு’, ‘பாா்டா் 2’, ‘துரந்தா் 2’, ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’, ‘மைக்கேல்’, ‘பூத் பங்களா’, ‘அப்செஷன்’, ‘ராஜா சிவாஜி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள், ரசிகா்களைத் திரையரங்குகளுக்குப் பெருமளவில் ஈா்த்துள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நடப்பு ஆண்டில் 2-ஆம் பாதியிலும் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகக் காத்திருப்பதால், திரையரங்குகளுக்கான ரசிகா்கள் வரத்தும், டிக்கெட் வசூலும் தொடா்ந்து உச்சத்திலேயே இருக்கும் என கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பின் தலைவா் கமல் கியான்சந்தானி மேலும் கூறுகையில், ‘பிரபல திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள், புதுமையான கதைக் களங்கள், பிராந்திய மொழிகளின் தரமான படைப்புகள், சா்வதேச திரைப்படங்கள் ஆகியவை இந்திய ரசிகா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் இன்னும் திரையரங்குகளில் படம் பாா்ப்பதையே அதிகம் விரும்புகிறாா்கள் என்பதற்கு இந்த வளா்ச்சி வலுவான சான்றாகும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.