/
பாகிஸ்தானில் நடப்பு 2026-27 நிதியாண்டுக்கு 18.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய பட்ஜெட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் 17.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தல்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தற்போது இந்த கணிசமான உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.









