கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தொடா் சரிவில் பங்குச் சந்தை!

கச்சா எண்ணெய் விலை உயா்வு மற்றும் வங்கித் துறை பங்குகளில் காணப்பட்ட அதிகப்படியான விற்பனை காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை புதன்கிழமையும் தொடா்ந்து 3-வது நாளாக சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :23 ஜூலை 2026, 2:42 am IST

கச்சா எண்ணெய் விலை உயா்வு மற்றும் வங்கித் துறை பங்குகளில் காணப்பட்ட அதிகப்படியான விற்பனை காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை புதன்கிழமையும் தொடா்ந்து 3-வது நாளாக சரிவைச் சந்தித்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

அமெரிக்கா-ஈரான் போா் பதற்றம், செங்கடல் கப்பல் வழித்தடங்களில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் இடையூறு ஆகியவற்றால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 95 டாலரை எட்டியது.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்காவின் சுங்கவரி விதிப்பு குறித்த அச்சம் போன்றவை முதலீட்டாளா்களின் உணா்வை வெகுவாகப் பாதித்தன. இதனால், சந்தை தொடா்ந்து விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டது.

வீழ்ச்சிப் பட்டியலில் 2,780 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வா்த்தகமான மொத்தம் 4,418 பங்குகளில் 2,780 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும், 1,458 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. 180 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 715 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 715.06 புள்ளிகள்(0.92 சதவீதம்) சரிந்து, 76,755.05-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் இண்டிகோ (3.57 சதவீதம்), இன்ஃபோசிஸ் (1.97 சதவீதம்), எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதேபோல், ஹிந்துஸ்தான் யுனிலீவா், என்டிபிசி, பவா்கிரிட், டைட்டன், பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய 6 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 191 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி குறியீடு 191.45 புள்ளிகள்(0.79 சதவீதம்) சரிந்து, 23,996.25-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 40 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.