பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 95.27 ஆக நிலைபெற்றது.

News image

இந்திய ரூபாய்

Updated On :10 ஜூன் 2026, 6:19 pm IST

மும்பை: அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இந்திய ரூபாய் மதிப்பிழப்பைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 95.27 ஆக நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து குறைந்ததால், ரூபாய் தனது ஆரம்பக்கட்ட சரிவிலிருந்து மீண்டு பிறகு உயர்ந்து நிறைவடைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.52 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ. 95.07 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.56 வரையிலும் சென்றது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ. 95.27 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 95.41 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee appreciated 14 paise to close at 95.27 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.