மும்பை: மீண்டும் பதற்றங்கள் அதிகரித்ததின் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ. 94.54 ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை சாதகமாக இருந்ததாலும், வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரித்ததாலும் ரூபாய் மதிப்பு நேர்மறையான நிலையிலேயே வர்த்தகத்தைத் தொடங்கியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்கா - ஈரானுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பதற்றங்கள் மீண்டும் தீவிரமடைந்ததால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது சிதைத்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.36 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு டாலருக்கு நிகரக இன்று அதிகபட்சமாக ரூ. 94.25 வரையிலும் சென்ற நிலையில், குறைந்தபட்சமாக ரூ. 94.56 வரை சென்றது. வர்த்தக முடிவில், முந்தைய வர்த்தக நாள் முடிவு நிலையை விட 9 காசுகள் சரிந்து ரூ. 94.54 ஆக நிறைவுபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.45 ஆக நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The rupee pared initial gains and settled lower by 9 paise at 94.54 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









