மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.74! 56 காசுகள் சரிவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :

மும்பை: அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலர் வலுவடைந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வால், அமெரிக்க டாலர் ஏற்றம் கண்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.35 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தின் போது இது அதிகபட்சமாக ரூ. 95.15 வரை உயர்ந்தது. வர்த்தக இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 56 காசுகள் சரிவுடன் ரூ. 95.74 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, அந்நிய மூலதன வரவை ஆதரிக்கவும், அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை வலுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56 காசுகள் உயர்ந்து ரூ. 95.18 ஆக முடிவடைந்தது.

Summary

The rupee depreciated 56 paise to settle at 95.74 against dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.