மும்பை: தொடர்ந்து, நான்கு வர்த்தக அமர்வாக சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டின் காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 96.28 ஆக நிறைவடைந்தன.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து, ரூபாயின் மீதான அழுத்தம் தொடர்ந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 96.35 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கிய அதன் பிறகு ரூபாய் மதிப்பு ரூ. 96.27 முதல் ரூ. 96.41 வரை வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ. 96.28 ஆக நிலைபெற்றது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ. 96.42ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee rose 14 paise to settle at 96.28 against the dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.54! 9 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.71! 47 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிறைவு!
விடியோக்கள்
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP




