உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு - PTI Graphics

Published On :

மும்பை: ஈரானுடனான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தன. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.

உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான போக்கு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு உதவின என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஈரானின் எண்ணெய் துறையைக் கைப்பற்றுவதாக மிரட்டிய சில மணிநேரங்களிலேயே அந்த நாட்டின் மீதான ராணுவத் தாக்குதல் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்தார். அத்துடன், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகலாம் என்றார்.

டிரம்பின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தது. குறிப்பாக, கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 4.25 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 86.54 டாலராக வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு முந்தைய நாள் முடிவை விட 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெறுவதற்கு முன், ரூபாயின் மதிப்பு ரூ. 95.40 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி பிறகு ரூ. 94.95 முதல் ரூ. 95.53 வரையிலான வரம்பிற்குள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 95.85 ஆக நிலைபெற்றது.

Summary

The rupee surged 77 paise to close at 95.08 on Friday as global oil prices fell sharply.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.