சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

7.40% வரை வட்டியுடன் புதிய வைப்புத் திட்டம்

நாட்டின் முன்னனி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, ‘பாப் கோல்டன் கோல் டெபாசிட் ஸ்கீம்’ எனும் புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 1:43 am IST

நாட்டின் முன்னனி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, ‘பாப் கோல்டன் கோல் டெபாசிட் ஸ்கீம்’ எனும் புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

555 நாள்கள் கால அளவைக் கொண்ட இச்சிறப்பு வைப்புத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.40 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படும்.

ரூ.3 கோடிக்கும் குறைவான சில்லறை வைப்புத் தொகைகளுக்குப் பொருந்தும் இப்புதிய திட்டத்தின்கீழ், பொது மக்களுக்கு 6.75 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டியும், 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீத வட்டியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற முடியாத வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 7.40 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். வாடிக்கையாளா்களுக்குச் சேமிப்பின் மீது உறுதியான லாபத்தை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வங்கியின் மொபைல் செயலி, இணையச் சேவை அல்லது கிளைகளுக்கு நேரடியாகச் சென்று வாடிக்கையாளா்கள் இந்த வைப்புத் திட்டத்தைத் தொடங்கலாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாத புதிய வாடிக்கையாளா்களும், வங்கியின் இணையதளம் மூலம் தனியாகச் சேமிப்புக் கணக்கு ஏதுமின்றி நேரடியாக இந்த வைப்புத் திட்டத்தில் எளிதாக முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.