எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

6 மதிப்புமிக்க நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 88,678 கோடி உயர்வு!

முதல் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.88,678.1 கோடி உயர்வு.

News image

சந்தை மூலதனம்

Updated On :28 ஜூன் 2026, 7:11 pm IST

புதுதில்லி: விடுமுறை காரணமாக கடந்த வாரம் நான்கு வர்த்தக அமர்வுகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், அதிக சந்தை மதிப்புடைய முதல் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.88,678.1 கோடி உயர்ந்துள்ளது. இதில், ஐசிஐசிஐ வங்கி அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 297.57 புள்ளிகளும், நிஃப்டி 42.9 புள்ளிகளும் உயர்வுடன் முடிவடைந்தன. ஜூன் மாதத்தின் நான்காவது வாரத்தில் நடைபெற்ற நான்கு வர்த்தக அமர்வுகளில் மூன்றில் சந்தை ஏற்றம் கண்டதால், வார இறுதியில் சிறிய அளவிலான லாபம் பதிவானது.

கச்சா எண்ணெய் விலை சரிவு, மேற்கு ஆசியாவில் நிலைமை மேம்பட்டது மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு கொள்முதல் ஆகியவை சந்தையின் உயர்வை தக்கவைக்க உதவியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்த நிலையில் மறுபுறம் பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), எல்ஐசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்தன.

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.29,588.75 கோடி உயர்ந்து ரூ.9,95,610.74 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.24,718.3 கோடி அதிகரித்து ரூ.12,25,981.44 கோடியாகவும் உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.12,043.96 கோடி உயர்ந்து ரூ.17,83,926.92 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் மதிப்பு ரூ.11,580.28 கோடி அதிகரித்து ரூ.6,10,081.53 கோடியாகவும் உயர்ந்தது.

மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.9,322.93 கோடி உயர்ந்து ரூ.9,64,738 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மூலதனம் ரூ.1,423.88 கோடி உயர்ந்து ரூ.5,80,550.83 கோடியாக உள்ளது.

மறுபுறம், எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.21,188.74 கோடி குறைந்து ரூ.5,35,537.56 கோடியாகவும், டிசிஎஸின் மதிப்பு ரூ.11,143.71 கோடி சரிந்து ரூ.7,58,206.42 கோடியாக உள்ளது.

பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ.35,615.21 கோடி குறைந்து ரூ.11,27,348.09 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ.5,321.83 கோடி குறைந்து ரூ.5,10,624.92 கோடியாக உள்ளது.

Summary

The combined market valuation of top 6 most valued companies went up by Rs 88,678.1 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.