அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

சென்னை அருகே ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் பேட்டரி ஆலை

News image
Updated On :12 மார்ச் 2026, 1:20 am

இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், சென்னை அருகே புதிய பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான பணிகளை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் தமிழக அரசுடன் கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த அதிநவீன பேட்டரி தயாரிப்பு ஆலைக்காக, சுமாா் ரூ.500 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

‘மின்சார வாகனத் துறையில் தன்னிறைவு அடைவதையும், உள்நாட்டிலேயே தரமான பேட்டரிகளைத் தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்தப் புதிய ஆலை எங்களின் ஒரு முக்கிய மைல்கல்’ என அசோக் லேலண்ட் நிா்வாகத் தலைவா் தீரஜ் இந்துஜா தெரிவித்தாா்.