கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மெர்சிடஸ் பென்ஸ் வி-கிளாஸ்: மீண்டும் இந்தியச் சந்தையில்!

மெர்சிடஸ் பென்ஸ் வி-கிளாஸ் பற்றி..

News image

மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ்

x.com

Updated On :13 மார்ச் 2026, 12:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆடம்பர கார் வகைகளில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் இந்தி நிறுவனம் தனது புதிய பதிவான வி-கிளாஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்ஸ் காருக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உள்ளது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆடம்பர எம்பிவி மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் உடன் பெரிய யு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒளிரும் கிரிலுடன் பென்ஸ் சிம்பல் பதியப்பட்டுள்ளது பார்ப்பதற்கே அட்டகாசமாக உள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

புதிய வி-கிளாஸ் மாடல் நான்கு மற்றும் ஆறு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இதில் காலநிலை கட்டுப்பாடு, உயர் தர ஒலி அமைப்பு, 64 நிற உள் அலங்கார ஒளி விளக்கு, இரட்டை 12.3 அங்குலம் திரைகள் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

சீட் பாதுகாப்பு அம்சமாக 7 ஏர்பேக், 360 டிகிரி கேமரா மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. 18 அங்குலம் இரட்டை நிற அலாய் சக்கரங்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் மின்சார ஸ்லைடிங் கதவுகள் போன்ற மேம்படுத்தப்பட்ட புது மாடல்களை இதில் புகுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. வி300 பெட்ரோல் இன்ஜின் 248 எச்.பி. சக்தியும், வி300டி டீசல் இன்ஜின் 233 எச்பி சக்தியும் வழங்குகின்றன. 9 வேகத் தானியங்கி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் வி-கிளாஸ் சோடலைட் ப்ளூ, அப்சிடியன் பிளக், ராக் கிரிஸ்டல் வைட், ஹைடெக் சில்வர், ஆல்பைன் க்ரே ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.4 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.