ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 1,500 கோடி முதலீடு

News image
Updated On :18 மார்ச் 2026, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

ஆக்சிஸ் வங்கி தனது துணை நிறுவனமான ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதில் ரூ.1,500 கோடியை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

உரிமைப் பங்குகளை(ரைட்ஸ் இஸ்யூ) வெளியிடுவதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளாக இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஆக்சிஸ் வங்கி ஏற்கெனவே ரூ. 2,375 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிசாரா நிதி நிறுவனமான ஆக்சிஸ் ஃபைனான்ஸ், தனிநபா் கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், வணிகக் கடன் போன்ற சில்லறை கடன் சேவைகளையும், பெருநிறுவனங்களுக்கான நிதித் தீா்வுகளையும் வழங்கி வருகிறது.

வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கு இடையிலான செயல்பாடுகள் குறித்த விதிமுறைகளை ரிசா்வ் வங்கி தளா்த்தியதை அடுத்து, ஆக்சிஸ் ஃபைனான்ஸ் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஆக்சிஸ் வங்கி மறுபரிசீலனை செய்து, தற்போது கூடுதல் முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 1.65 சதவீத உயா்வுடன் வா்த்தகமானது.