நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 325.72 புள்ளிகள் உயர்ந்து 74,532.96 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.35 புள்ளிகள் உயர்ந்து 23,114.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 12:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: எரிபொருள் சார்ந்த பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணத்தால், பொதுத்துறை வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகப் பங்குகளில் ஏற்பட்ட கொள்முதல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கிட்டத்தட்ட 0.5 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.

மோதலைத் தணிப்பதையும், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதையும் உள்ளிட்ட கருத்துக்கள், பங்குச் சந்தையின் மிதமான மீட்சிக்கு வழிவகுத்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமானது. பிறகு சென்செக்ஸ் 1,079.15 புள்ளிகள் உயர்ந்து 75,286.39 புள்ளிகளை எட்டியது. அதே போல் நிஃப்டி 343 புள்ளிகள் உயர்ந்து 23,345.15 புள்ளிகளாக இருந்தது.

பிற்பகல் 2.50 மணி வர்த்தகத்தில், சென்செக்ஸ் 249.83 புள்ளிகள் உயர்ந்து 74,457.07 ஆகவும், நிஃப்டி 84.40 புள்ளிகள் உயர்ந்து 23,086.55 ஆகவும் இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 325.72 புள்ளிகள் உயர்ந்து 74,532.96 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 112.35 புள்ளிகள் உயர்ந்து 23,114.50 புள்ளிகளாக நிலைபெற்றது. இன்று சுமார் 2,343 பங்குகள் உயர்ந்தும், 1,565 பங்குகள் சரிந்தும், 140 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ட்ரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், என்டிபிசி மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.

இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்பட்ட உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இன்று பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. அதே வேளையில், பயனர்களுக்கு விற்கப்படும் மொத்த டீசலின் விலை லிட்டருக்கு சுமார் ரூ.22 உயர்த்தப்பட்டது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு உயர்வுடன் முடிவடைந்த அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. விடுமுறை முன்னிட்டு ஜப்பான் சந்தை மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தை சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.88 சதவீதம் உயர்ந்து 110.7 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.