புதுதில்லி: கடந்த வாரம், பங்குகள் பலவீனமான போக்கைக் கடைப்பிடித்ததன் எதிரொலியாக, மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ. 1.75 லட்சம் கோடியாக சரிவு.
கடந்த வாரம், சென்செக்ஸ் 949.74 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 294.9 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
மாறிவரும் உலகளாவிய தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சந்தைகள் கடந்த வாரம் பலவீனமான நிலையுடன் நிறைவு செய்தன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றங்கள் தற்காலிகமாகத் தணியக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வாரத்தின் நடுப்பகுதியில் சந்தையில் மீட்சி தென்பட்டது. எனினும், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை மீண்டும் ஏற்பட்ட விற்பனையின் அழுத்தம் காரணமாக, சந்தையின் உயர்வு, சரிந்து பங்குச் சந்தை குறியீடுகளை மீண்டும் கீழ்நோக்கி இழுத்துச் சென்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 89,720.3 கோடி சரிந்து ரூ. 18,24,515.62 கோடியாகவும், எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 37,248.59 கோடி சரிந்து ரூ. 11,64,018.69 கோடியாக வீழ்ச்சியடைந்தது.
பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 35,399.42 கோடி சரிந்து ரூ. 9,41,569.15 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ. 8,121.76 கோடி சரிந்து ரூ. 8,83,551.30 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,480.42 கோடி சரிந்து ரூ. 10,50,413.33 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ. 2,091.13 கோடி சரிந்து ரூ. 4,87,540.19 கோடியாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் சந்தை மூலதனம் ரூ. 271.35 கோடி சரிந்து ரூ. 8,64,668.65 கோடியாக உள்ளது.
மறுபுறம் லார்சன் & டூப்ரோவின் சந்தை மதிப்பு ரூ. 18,051.68 கோடி உயர்ந்து ரூ. 4,90,536.19 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ. 8,680.36 கோடி உயர்ந்து ரூ. 5,25,395.48 கோடியாகவும், இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ. 6,245.3 உயர்ந்து ரூ. 5,15,034.67 கோடியாக உள்ளது.
மதிப்புமிக்க நிறுவனத்திற்கான முதலிடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தக்கவைத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
Summary
The combined market valuation of seven of the top-10 most valued firms tumbled by Rs 1.75 lakh crore last week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் எதிரொலி: மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடி நிதியை வெளியேற்றிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

1 டாலர் - ரூ. 94.05! 29 காசுகள் சரிந்தது!

பங்குச் சந்தை உயர்வு எதிரொலி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

டாப் 10 மதிப்புள்ள 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியாக சரிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


