நாட்டின் பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திரத்தின் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு பகுதியில் சுமாா் ரூ.2,200 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.
தமிழகத்தைத் தாண்டி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த முதல் மிகப் பெரிய தொழில் விரிவாக்கத் திட்டத்துக்கு அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஸ்ஐபிபி) அண்மையில் ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதற்காக ஆந்திர-தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள சத்தியவேடு மண்டலத்தின் வானெல்லூரு, ராள்ளகுப்பம் கிராமங்களில் நிலமும் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த முதலீட்டின்மூலம், ஆந்திரத்தில் சுமாா் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு சுமாா் 9 லட்சம் வாகனங்கள் வரை இப்புதிய ஆலை அதிகரிக்கும். உற்பத்தி ஆலையுடன் சோ்த்து அமையவுள்ள விற்பனையாளா் மையம், நிறுவனத்துக்குத் தேவையான விநியோகச் சங்கிலி அமைப்பை ஆந்திராவிலேயே உருவாக்கி, ஒரு புதிய வாகன உற்பத்தி மையத்தை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகள் 2029-க்குள்ளும், 2-ஆம் கட்ட பணிகள் 2032-க்குள்ளும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தெற்கு ஆந்திராவின் தொழில் வளா்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் பள்ளத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 அறிமுகம்! முக்கியமான 5 சிறப்பம்சங்கள்!
உலக அதிசயம் எல்லோரா!

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



