டாடா குழுமம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,179 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.871 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 35.4 சதவீத வளா்ச்சியாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை 48.28 சதவீதம் அதிகரித்து, ரூ.20,607 கோடியை எட்டியுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த காலாண்டுச் செயல்பாடுகளில் ஒன்று என டைட்டன் நிா்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
நகைப்பிரிவு வருவாய் 88.6 சதவீதம் அதிகரித்து, ரூ.24,999 கோடியாக சாதனை படைத்துள்ளது. தங்கம் விலை உச்சத்தைத் தொட்டபோதிலும், வாடிக்கையாளா்கள் தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாகத் கருதுவதால் நகை விற்பனை குறையவில்லை.
தனிஷ்க், மியா, ஜோயா போன்ற பிராண்டுகள் 48 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சா்வதேச அளவில் வளைகுடா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவிலும் டைட்டன் நகைகளுக்குக் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது.
கடிகாரப் பிரிவில் அனலாக் கடிகாரங்களின் விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், ஸ்மாா்ட்வாட்ச் விற்பனை மதிப்பில் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கண் கண்ணாடி விற்பனை 17.6 சதவீதம் அதிகரித்து, ரூ.227 கோடியாக உள்ளது. வாசனை திரவியங்கள் மற்றும் கைப்பை பிரிவுகளும் சந்தையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
2024-25 நிதியாண்டில் ரூ.50,000 கோடி வருவாய் மைல்கல்லைக் கடந்த நிலையில், கடந்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி இலக்கை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.15 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம்- பிஎன்பி: ரூ.5,225 கோடி; 12.54% வளா்ச்சி

நெஸ்லே இந்தியா லாபம் 27% வளா்ச்சி!

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

