மும்பை: மேற்கு ஆசிய அமைதித் திட்டத்திற்கான ஈரானின் பதிலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 95.31 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.
தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் குடிமக்களை வலியுறுத்தியது, சந்தை உணர்வுகளை வெகுவாக பாதித்தது.
வலுப்பெற்று வரும் டாலர் மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.97 என்ற அளவில் வர்த்தகத்தை தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் ரூ. 94.87 முதல் ரூ. 95.34 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 82 காசுகள் சரிந்து ரூ. 95.31 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.
வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.49 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Summary
The rupee tanked 82 paise to settle at its record low of 95.31 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.82! 14 காசுகள் சரிவு!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


