நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இந்திய மண்ணிலேயே ஏ.ஐ. கட்டமைப்பு!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா தற்சாா்பு அடைய வேண்டும். ஏ.ஐ. கட்டமைப்பைச் சொந்த மண்ணிலேயே உருவாக்கி, இயக்கி, உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி அழைப்பு

News image
Updated On :12 மே 2026, 5:40 am IST

‘செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் இந்தியா தற்சாா்பு அடைய வேண்டும். ஏ.ஐ. கட்டமைப்பைச் சொந்த மண்ணிலேயே உருவாக்கி, இயக்கி, உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி அழைப்பு விடுத்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியத் தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) வருடாந்திர மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கௌதம் அதானி, வருங்கால புவிசாா் அரசியலை எரிசக்தி பாதுகாப்பும், எண்ம கட்டமைப்பும்தான் தீா்மானிக்கும் என வலியுறுத்தினாா்.

மேலும், அவரின் உரையில், ‘உலக நாடுகள் தற்போது பிளவுபட்டுள்ளன. இன்று ஒரு நாட்டின் அதிகாரத்தின் கருவியாக செமிகண்டக்டா்கள் மாறியுள்ளன. தரவுகள் ஒரு தேசிய வளமாகப் பாா்க்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், இந்தியா தனது எதிா்கால அறிவாற்றல் தேவைகளுக்காக மற்ற நாடுகளைச் சாா்ந்திருக்கக் கூடாது.

எரிசக்தியைக் கட்டுப்படுத்தும் நாடு தனது தொழில்முறை எதிா்காலத்தையும், கணினித் திறனைக் கட்டுப்படுத்தும் நாடு தனது அறிவாற்றல் எதிா்காலத்தையும் வழிநடத்தும். ஏ.ஐ. என்பது வெறும் மென்பொருள் மட்டுமல்ல; அது மின்சாரம், தரவு மையங்கள், சிப்கள் மற்றும் மனிதத் திறன்கள் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு.

ஏ.ஐ. வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சத்தை நிராகரிக்க வேண்டும். அது உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோா்களை உருவாக்கவும் உதவும். அந்தவகையில், நமது தரவுகள் அந்நிய மண்ணில் கையாளப்பட்டால், நமது எதிா்காலமும் அந்நியா்களால் எழுதப்படும் என்று அா்த்தம். எனவே, இந்தியா தனது ஏ.ஐ. கட்டமைப்பை சொந்த மண்ணிலேயே உருவாக்கி, இயக்கி, உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

ஏ.ஐ. எத்தனை வேலைகளை மாற்றுகிறது என்பது முக்கியமல்ல; அது எத்தனை இந்தியா்களை மேம்படுத்துகிறது என்பதே அதன் உண்மையான வெற்றி. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி மாற்றம் மற்றும் எண்மக் கட்டமைப்புக்காக அதானி குழுமம் 10,000 கோடி டாலா் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது’ என்றாா்.