சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 12) சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த மே 7-ஆம் தேதி கிராம் ரூ.14,150-க்கும், சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து 3 நாள்களாக விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், திங்கள்கிழமை விலை சற்று குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,640-க்கும் கிராமுக்கு ரூ. 230 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,330-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 உயர்வு
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 15,000 உயா்ந்து ரூ. 3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold has risen by Rs. 1,840 per sovereign today (May 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு: தங்கம்?

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

