முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை! பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி புகழாரம்

News image

~

Updated On :14 மே 2026, 3:00 am IST

இந்தியத் தொழில்துறையில் முன்னோடியாக, சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தேச கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றி வரும் பஜாஜ் குழுமம், தனது 100-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

14,800 கோடி டாலா் சந்தை மதிப்புடன், ஆட்டோமொபைல் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கும் இக்குழுமம், இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு குடும்பங்களுக்குத் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் நேரடியாகப் பயனளித்து வருகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லையொட்டி பஜாஜ் குழுமத்துக்குப் பிரதமா் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘100 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் நீண்ட ஆயுளை மட்டுமல்லாமல், மாறிவரும் காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அதன் திறனையும், நிலைத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் பிரிக்க முடியாத அங்கமாக பஜாஜ் நிறுவனம் மாறியுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குக்குள் வளா்ந்த இந்தியா எனும் இலக்கை எட்டுவதில், பஜாஜ் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதற்காக மும்பையில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, குழும நிறுவனா் ஜம்னாலால் பஜாஜ் மற்றும் மகாத்மா காந்தியின் உறவைச் சித்தரிக்கும் திரைப்படம் திரையிடப்பட்டது.

மேலும், குழுமத்தின் சிஎஸ்ஆா் திட்டமான ‘பஜாஜ் பியாண்ட்’ மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Story image