மும்பை: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 95.71 என்ற அதன் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவுக்கு இன்று சென்றது.
முன்னதாக, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடியால் உலகளாவிய வர்த்தகம் நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, தொடர்ந்து 4வது வர்த்தக அமர்வாக ரூபாய் பலவீனமடைந்தது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.80 என்ற அதன் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சென்றது.
மே 13 முதல் அமலுக்கு வரும் வகையில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகிய உலோகங்களின் வெளிநாட்டு இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், மத்திய அரசு அவற்றின் மீது இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு, அதன் முந்தைய நாள் வர்த்தக நிறைவை விட 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.52ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. அதே அமர்வில் 21 காசுகள் சந்தித்தது. பிறகான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ. 95.51 என்ற நாளின் அதிகபட்ச நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian rupee plunged 8 paise to a new record closing low of 95.71 against the US dollar on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.65! 15 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.54! 9 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.74! 56 காசுகள் சரிவு!
விடியோக்கள்

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar



