அதிநவீன 8,000 mAh பேட்டரியுடன் ரியல்மி 16டி போன் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ரியல்மி நிறுவனம். இந்த போனில் என்னென்ன ஃபீச்சர்கள் எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஓப்போ (Oppo) நிறுவனத்தின் ஆதரவுடன் சீன மொபைல் போன் நிறுவனமான ரியல்மி நிறுவனம் மலிவு விலையில் புதிய போன்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த போனில் அதிகளவிலான ஃபீச்சர்கள் இருப்பதால், இந்தியாவிலும் நல்ல வர்த்தகத்தைக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ரியல்மி 16டி என்ற புதிய மொபைலை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. மே 22 ஆம் தேதி இந்த மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜியில் தயாரிக்கப்படும் இந்த மொபைலில் பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மூன்று நாள்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் 8,000 mAh அதிநவீன திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
45W சார்ஜருடன் 7 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 11 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தவும், கேம் விளையாடவும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்நினைவகமும், மற்றொரு மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்நினைவகமும், 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் விலையை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. மே 22 ஆம் தேதி நடைபெறும் அறிமுக விழாவில் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் அரோரா பச்சை, ஸ்டார்லைட் சிவப்பு, ஸ்டார்லைட் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
Summary
Realme has confirmed that the Realme 16T 5G will launch on May 22, 2026. The phone will feature an 8,000mAh battery, 45W fast charging, 6.8-inch 144Hz display, a MediaTek Dimensity 6300 chipset, and a 50MP primary camera.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யுடன் போனில் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார்!

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
