இந்தியாவில் அரசு சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவது நாளுக்கு நாள் எளிதாகி வருகிறது. நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பே இதற்குக் காரணம். டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மக்கள் சில ஆன்லைன் வசதிகளுக்கு மட்டும் கட்டுப்படாமல், பல்வேறு அரசு தொடர்புடைய சேவைகளுக்கான கட்டணங்களையும் இப்போது ஆன்லைனில் செலுத்த முடிகிறது.
பல ஆண்டுகளாகவே அரசு கட்டணங்களைச் செலுத்துவது என்பது ஆவணப் பணிகளுக்கான காத்திருப்பு, நீண்ட வரிசைகள் மற்றும் அடிக்கடி நினைவூட்டல்களுடன் கூடிய சிரமமான செயலாக இருந்தது. இதற்காக அலுவலகங்களுக்கு நேரில் சென்று, வேலை அல்லது குடும்ப நேரத்தை இழக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த பொறுப்புகள் சில நிமிடங்களில் முடிவடைகின்றன; அதுவும் அவர்கள் தினசரி பயன்படுத்தும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக.
இந்த மாற்றத்தில் முதன்மையாக இருப்பது, “பாரத் கனெக்ட்” (Bharat Connect) தளம். இது அரசு மற்றும் பயன்பாட்டு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைகளை சாத்தியமாக்குகிறது. பல்வேறு கட்டண வசூலிப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேனல்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம், மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அல்லது எந்த சேவைக்காக பணம் செலுத்தினாலும் ஒரே மாதிரியான, நம்பகமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, குடிமக்கள் மற்றும் அரசாங்கம் இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாகவும், வேகமாகவும், நம்பகமாகவும் மாற்றியுள்ளது.
இன்று நாடு முழுவதும் மக்கள் மின்கட்டணம், நகராட்சி மற்றும் குடிநீர் வரி, FASTag ரீசார்ஜ், e-challan அபராதங்கள், வாழ்க்கை காப்பீட்டு கட்டணங்கள், ஓய்வூதிய பங்களிப்புகள் போன்றவற்றை பாரத் கனெக்ட் மூலம் சில விநாடிகளில் செலுத்தி வருகின்றனர். இது இந்தியாவின் மிகவும் தாக்கமுள்ள Customer-to-Government (C2G) டிஜிட்டல் வெற்றிக் கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போது, பாரத் கனெக்ட் அமைப்பில் 29-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 22,000-க்கும் அதிகமான கட்டண வசூலிப்பாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், இது 700-க்கும் அதிகமான செயலிகள் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது. இதனால், இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது.
பாரத் பில்பே லிமிடெட் (NPCI Bharat BillPay Limited - NBBL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான நூபுர் சதுர்வேதி கூறுகையில், இந்த மாற்றம் வெறும் வேகத்தைப் பற்றியது மட்டுமல்ல; நம்பிக்கையையும் பழக்கத்தையும் உருவாக்குவதையும் குறிக்கிறது. “டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், மக்கள் அரசு சேவைகளுடன் தொடர்பு கொள்வது எப்படி என்பதை முற்றிலும் மாற்றிவிட்டன. சிரமத்திலிருந்து எளிமைக்கே கவனம் மாறியுள்ளது,” என அவர் கூறுகிறார்.
பாரத் கனெக்டின் அமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி உள்ளவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதோடு, நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ஆஃப்லைன் முகவர்கள் மூலமாக உதவியுடன் கட்டணங்களை செலுத்தும் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்கள் அருகிலுள்ள முகவரை அணுகி கட்டணங்களை செலுத்த முடிகிறது. இந்த கலப்பு முறை, டிஜிட்டல் வசதிகளுக்கான அணுகல் குறைவுகளை குறைத்து, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி இல்லாதவர்களுக்கும் எளிமை மற்றும் நம்பகத்தன்மையை கொண்டு சேர்க்கிறது.
இந்த அணுகுமுறை மக்களின் நிதி பழக்கங்களையும் மாற்றி வருகிறது. ஒரே மாதிரியான செயல்முறைகள், கட்டண உறுதிப்படுத்தல்கள் மற்றும் நினைவூட்டல்கள் ஆகியவை அமைப்பில் உள்ளதால், மக்கள் கட்டணங்களை காலத்துக்கு உட்பட்டு செலுத்துவதோடு, தங்களது செலவுகளையும் சிறப்பாக கண்காணிக்க முடிகிறது. அரசாங்க அமைப்புகளுக்கு இது வசூல் அதிகரிப்பு, தாமதங்கள் குறைதல் மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை ஆகிய பலன்களை வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான நம்பிக்கையும் வலுப்பெறுகிறது.
மேலும், அவர் கூறுகையில், “ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை அமைப்பு மூலம், அனைத்து சேவைகளிலும் ஒரே மாதிரியான உறுதி மற்றும் வெளிப்படைத்தன்மையை மக்கள் அனுபவிக்கிறார்கள். பெரிய அளவிலான பயன்பாட்டை நிலைநிறுத்த இது மிகவும் அவசியமானது,” என்றார்.
இந்தியா தனது டிஜிட்டல் பொது கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டிருக்கையில், பாரத் கனெக்ட் மக்கள் மற்றும் அரசாங்கம் இடையேயான தொடர்புகளை எளிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று, அரசு கட்டணத்தை செலுத்துவது என்பது மொபைல் ரீசார்ஜ் செய்வது அல்லது ஆன்லைனில் மளிகை பொருட்களுக்கு பணம் செலுத்துவது போன்ற சாதாரண செயலாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் தினசரி வாழ்க்கையுடன் இயல்பாக கலந்துவிட்டதால், மக்களின் நேரமும் மனஅழுத்தமும் குறைகிறது. டிஜிட்டல் கட்டமைப்பு மேலும் வளர்ந்துவரும் நிலையில், ஒரு அரசு கட்டணத்தை செலுத்துவது தினசரி வாழ்க்கையின் ஒரு சிறிய இடைவெளியில், தேநீர் தயாராகும் முன்னரே முடிந்து விடும் அளவுக்கு எளிதாக மாறியுள்ளது.
Paying fees for government services in India is becoming easier day by day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி லாஜிஸ்டிக்ஸ் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பணம் பெறும் வசதி
48 கிராமங்களுக்கு நகா்ப்புற அந்தஸ்து வழங்க எம்சிடி ஒப்புதல்

வாக்கு எண்ணிக்கை: 129 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

