சவுத் இந்தியன் வங்கியின் புதிய கிளை சேலம் ஆத்தூரில் திறப்பு
இந்தியாவின் முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியின் புதிய கிளை, சேலம் மாவட்டம், ஆத்தூா் தாலுகாவின் நரசிங்கபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியின் புதிய கிளை, சேலம் மாவட்டம், ஆத்தூா் தாலுகாவின் நரசிங்கபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, நரசிங்கபுரம் விநாயகபுரம் பிரதான சாலை, என்விஎன் நகரில் அமைந்துள்ள இப்புதிய கிளையை பாரதியாா் கல்வி நிறுவனங்களின் செயலா் ஏ.கே.ராமசாமி திறந்து வைத்தாா்.
இப்புதிய கிளையின் ஏடிஎம் மையத்தை நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் ஏ.பவித்ராவும், வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறையை எஸ்டிகே சாகோ தொழிற்சாலையைச் சோ்ந்த எஸ்.வெற்றிவேலும் திறந்து வைத்தனா்.

விழாவில் சவுத் இந்தியன் வங்கியின் கோயம்புத்தூா் மண்டலத் தலைவா் வி.என்.பிரதீப், சேலம் கிளஸ்டா் தலைவா் டி.பினுநாத், ஆத்தூா் கிளை மேலாளா் எஸ்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களும், வாடிக்கையாளா்களும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

