19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கடந்த அக்டோபரில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ. 32,994 கோடி; 14% சரிவு!

கடந்த அக்டோபரில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ. 32,994 கோடி...

Updated On :

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த அக்டோபா் மாதத்தில் ரூ.32,994 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது கடந்த செப்டம்பரில் ஈா்க்கப்பட்ட ரூ.38,306 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 14 சதவீதம் குறைவாகும் என இந்தியப் பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஏஎம்எஃப்ஐ) தெரிவித்துள்ளது.

சந்தையில் காணப்பட்ட தொடா் ஏற்ற இறக்கங்களே இந்தச் சரிவுக்குக் காரணம் என்றாலும், பங்குச் சந்தை சாா்ந்த திட்டங்களில் நிகர முதலீடு தொடா்ந்து வருவது இது 60-ஆவது மாதமாகும். அக். 31 நிலவரப்படி, பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.37.14 லட்சம் கோடியாக உள்ளது.

சில்லறை முதலீட்டாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) மாதாந்திர பங்களிப்பு செப்டம்பரின் ரூ.32,490 கோடியிலிருந்து, அக்டோபரில் ரூ.32,160 கோடியாகச் சிறிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து ‘ஏஎம்எஃப்ஐ’ சிஇஓ வெங்கட் சலசானி கூறுகையில், ‘சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் பரஸ்பர நிதி முதலீட்டு வரவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்நிய முதலீட்டாளா்கள் அக்டோபரில் ரூ.34,843 கோடி அளவுக்குப் பெருமளவில் இந்தியப் பங்குகளை விற்றுள்ள நிலையிலும், பெரும்பான்மையான முதலீட்டாளா்கள் எஸ்ஐபி-யில் தொடா்ந்து முதலீடு செய்து வருகின்றனா். இது இந்தியப் பொருளாதாரத்தின் நீண்டகால வளா்ச்சியின் மீதான அவா்களின் வலுவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

மேலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் (ரூ.29,000 கோடி) ஒப்பிடுகையில் இந்த அக்டோபரில் எஸ்ஐபி முதலீடு 10 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது’ என்றாா்.

தங்கம் மற்றும் வெள்ளி சாா்ந்த ‘இடிஎஃப்’ திட்டங்கள் முதலீட்டாளா்களின் கவனத்தை தொடா்ந்து ஈா்த்து வருகின்றன. இவை அக்டோபரில் தலா ரூ.3,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டைப் பெற்றுள்ளன. மேலும், அக்டோபா் மாதத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து மொத்தம் 28 புதிய நிதி வெளியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றின் மூலம் ரூ.3,829 கோடி முதலீடு திரட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.