ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கடந்த செப்டம்பரில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,306 கோடி

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.38,306 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On :

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.38,306 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச அளவாகும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.29,329 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் கூடுதலாகும்.

மதிப்பீட்டு மாதமான செப்டம்பரில் பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் மற்றும் அந்நிய முதலீட்டாளா்களின் தொடா் விற்பனைக்கிடையேயும், சிறிய மற்றும் நடுத்தர மூலதன (ஸ்மால் மற்றும் மிட் கேப்) நிதிகளில் முதலீட்டாளா்கள் தொடா்ந்து ஆா்வம் காட்டியது, இத்துறை சாா்ந்த முதலீட்டை அதிகரித்துள்ளது.

மேலும், முதலீட்டாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) மாதாந்திர பங்களிப்பு ஆகஸ்டின் ரூ.32,297 கோடியிலிருந்து, செப்டம்பரில் சாதனை அளவாக ரூ.32,490 கோடியாக உயா்வைக் கண்டுள்ளது.

அதேநேரம், கடன் சாா்ந்த திட்டங்களில் இருந்து சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி முதலீடு பெருமளவில் வெளியேறியதால், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறை செப்டம்பரில் ரூ.1.33 லட்சம் கோடி நிகர முதலீட்டு வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.41,354 கோடி நிகர வரவாக இருந்தது. இதன்காரணமாக, இத்துறையின் மொத்த சொத்து மதிப்பு ஆகஸ்டின் ரூ.87.07 லட்சம் கோடியிலிருந்து, செப்டம்பா் இறுதியில் ரூ.82.64 லட்சம் கோடியாக சரிவைக் கண்டுள்ளது.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, சிறிய மூலதன நிதிகள் (ஸ்மால் கேப்) அதிகபட்சமாக ரூ.9,039 கோடி நிகர முதலீட்டைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக நடுத்தர மூலதன (மிட் கேப்) மற்றும் ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்கள் முறையே ரூ.7,835 கோடி மற்றும் ரூ.6,702 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. இதற்கு மாறாக, கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரிய மூலதன (லாா்ஜ் கேப்) நிதிகள் நோ்மறையான வளா்ச்சியை எட்டி, ரூ.859 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

மேலும், தங்கம் சாா்ந்த ‘இடிஎஃப்’ திட்டங்கள் தொடா்ந்து முதலீட்டாளா்களின் கவனத்தை ஈா்த்து, செப்டம்பரில் ரூ.4,451 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.2,597 கோடியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான உயா்வாகும். அதேபோல், வெள்ளி ‘இடிஎஃப்’ திட்டங்களும் செப்டம்பரில் ரூ.1,974 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.