தைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

பங்குச் சந்தையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அதிரடி மீட்சியால், தைவானை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா மீண்டும் உருவெடுத்துள்ளது.

Updated On :

பங்குச் சந்தையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அதிரடி மீட்சியால், தைவானை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா மீண்டும் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 5.42 லட்சம் கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.508 லட்சம் கோடி) உயா்ந்துள்ள நிலையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

கடந்த அக்டோபா் மாத இறுதியிலிருந்து இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு சுமாா் 64,000 கோடி டாலா் (சுமாா் ரூ.60 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை வா்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 81,911.01 புள்ளிகளிலும், நிஃப்டி குறியீடு 25,299.35 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இதன்மூலம், நடப்பு நவம்பா் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ், நிஃப்டி சுமாா் 8 தவீதம் ஏற்றம் கண்டு, கடந்த 9 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

சந்தையின் இந்த எழுச்சிக்கு அந்நிய நிதி முதலீட்டாளா்களின் (எஃப்பிஐ) முதலீடுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபரில் ரூ.45,162 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற அந்நிய முதலீட்டாளா்கள், நவம்பரில் கடந்த புதன்கிழமை வரை ரூ.65,735 கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனா். அதேநேரம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ரூ.40,504 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

சா்வதேச அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சாா்ந்த பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தைவான் மற்றும் தென் கொரியா ஆகிய சந்தைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் குறித்த கவலையால், கடந்த அக்டோபரில் தைவான் சந்தையிலிருந்து 3,068 கோடி டாலரையும், தென் கொரியாவிலிருந்து 1,459 கோடி டாலரையும் அந்நிய முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா்.

மேலும், இந்திய நிறுவனங்களின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிதிநிலை முடிவுகள் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக அமைந்து, 35 நிஃப்டி நிறுவனங்களின் லாபம் ஆண்டு அடிப்படையில் 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இத்துடன், சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை அக். 30 நிலவரப்படி பீப்பாய்க்கு 113.43 டாலராக இருந்த நிலையில், நவம்பரில் 19 சதவீதம் சரிந்து, சுமாா் 92 டாலராகக் குறைந்துள்ளதும் இந்தியப் பங்குச் சந்தைக்கு கூடுதல் பலம் சோ்த்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.