டிஎஸ்எம் ஃப்ரெஷ் ஃபுட்ஸ் Q2 லாபம் ரூ. 7.30 கோடியாக உயர்வு!
நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7.30 கோடி ஈட்டியதாக அறிவித்தது.

DSM Fresh Foods Limited
மும்பை: இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் 'ஸாப்ஃப்ரெஷ்' பிராண்டை நடத்தி வரும் டிஎஸ்எம் ஃப்ரெஷ் ஃபுட்ஸ் லிமிடெட், நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7.30 கோடி ஈட்டியதாக இன்று அறிவித்தது.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கால்பதித்த இந்நிறுவனம், இதற்கு முந்தைய ஆறு மாத காலத்தில் 2026 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த அரையாண்டில் ரூ.7.31 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.165.48 கோடியாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டின் 2வது அரையாண்டில் பதிவான ரூ.124.97 கோடியுடன் ஒப்பிடுகையில் 32.42 சதவீதம் அதிகமாகும். அதே வேளையில் இதர வருமானத்தையும் சேர்த்து, மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 165.89 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
அரையாண்டு காலத்தில் நிறுவனம் செய்த மொத்த செலவினங்கள் 35.79% அதிகரித்து ரூ.155.67 கோடியாகவும், இதற்கு முந்தைய ஆறு மாத காலத்தில் இது ரூ.114.64 கோடியாக இருந்தது.
டிஎஸ்எம் ஃப்ரெஷ் ஃபுட்ஸ் லிமிடெட் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.8.83 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான ரூ.7.03 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 25.64% அதிகமாகும். செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 95.85 கோடியாக இருந்த நிலையில், இது ஆண்டுக்கு ஆண்டு 60.27% அதிகரித்து ரூ. 153.62 கோடியாக உயர்ந்துள்ளது.
Summary
DSM Fresh Foods Limited has reported a consolidated net profit of Rs 7.30 crore for the first half ended September 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


