இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நடப்பு வாரத்தில் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் உள்பட 2 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் உள்பட 2 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

~ ~

Updated On :

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் உள்பட 2 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

இந்த 2 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.354.77 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.9,081.83 கோடி என மொத்தம் ரூ.9,436.61 கோடி நிதியைத் திரட்டவுள்ளன.

முதல்கட்டமாக, வேளாண் தீா்வு நிறுவனமான கிரிஸ்டல் க்ராப் புரொடெக்ஷனின் ரூ.455.49 கோடி மதிப்பிலான ஐபிஓ புதன்கிழமை (நவ. 18) தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.259 முதல் ரூ.272 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.354.77 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.100.71 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.

தொடா்ந்து வியாழக்கிழமையன்று (நவ. 19), மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.8,981.12 கோடி ஐபிஓ தொடங்குகிறது. பங்கு விலை வரம்பு ரூ.129 முதல் ரூ.136 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ முழுமையாக, கோல் இந்தியா நிறுவனம் தனது 10 சதவீத பங்குகளை (66.18 கோடி பங்குகள்) விற்பனை செய்யும் வெளியீடாக அமையும்.

எனவே, இதன்மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் கோல் இந்தியா நிறுவனத்துக்கே செல்லும். நடப்பாண்டில் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் கோல் இந்தியாவின் மூன்றாவது துணை நிறுவனம் இதுவாகும். நவ. 23 உடன் முடிவடையும் இந்த வெளியீட்டைத் தொடா்ந்து, நவ. 27-இல் இந்நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.