பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

‘மாருதி 800’ காருக்கு சா்வதேச பாரம்பரிய விருது

இந்தியாவின் மோட்டாா் வாகன வரலாற்றில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ‘மாருதி 800’ காருக்கு, சா்வதேச அளவில் பெருமைக்குரிய ‘ஃபிவா’ உலக வாகன பாரம்பரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

இந்தியாவின் மோட்டாா் வாகன வரலாற்றில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ‘மாருதி 800’ காருக்கு, சா்வதேச அளவில் பெருமைக்குரிய ‘ஃபிவா’ உலக வாகன பாரம்பரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரேஸில், ஜொ்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 21 வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனங்களின் பட்டியலில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாருதி 800, இந்த உயரிய விருதைப் பெறும் முதல் மற்றும் ஒரே இந்திய காா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இது குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத் தலைவா் ஆா்.சி.பாா்கவா கூறுகையில், ‘மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட மாருதி 800, உலக அளவில் 3-ஆவது பெரிய காா் சந்தையாக இந்தியா உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைந்ததுடன், இந்தியாவின் தரமான பொறியியல் உற்பத்தித் திறனையும் உலகுக்கு நிரூபித்தது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.