பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

ஏப்ரல்-செப். அரையாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் 16.9% வளா்ச்சி

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில், நாட்டின் 12 பொதுத் துறை வங்கிகளின் ஒட்டுமொத்த நிகர லாபம் 16.9 சதவீதம் வளா்ச்சியுடன் ரூ.1.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

~

Updated On :

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில், நாட்டின் 12 பொதுத் துறை வங்கிகளின் ஒட்டுமொத்த நிகர லாபம் 16.9 சதவீதம் வளா்ச்சியுடன் ரூ.1.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், பொதுத் துறை வங்கிகளின் மொத்த வா்த்தகம் வரலாற்றில் முதன்முறையாக ரூ.300 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஏப்ரல்-செப். அரையாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வா்த்தகம், கடந்த ஆண்டைவிட 15.5 சதவீதம் வளா்ச்சியடைந்து, ரூ.301.6 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இதில் வங்கிகளின் வைப்புத் தொகை 13.1 சதவீதம் அதிகரித்து, ரூ.165.2 லட்சம் கோடியாகவும்; கடன் வழங்கல் 18.8 சதவீதம் அதிகரித்து, ரூ.136.4 லட்சம் கோடியாகவும் உள்ளது.

வங்கிகளின் செயல்பாட்டு லாபம் 13.9 சதவீதம் அதிகரித்து, ரூ.1.81 லட்சம் கோடியாகவும்; சொத்துகள் மீதான வருவாய் விகிதம் 1.11 சதவீதமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, சில்லறைக் கடன்கள் 17 சதவீதமும், வேளாண் கடன்கள் 19.5 சதவீதமும், எம்எஸ்எம்இ கடன்கள் 20.4 சதவீதமும் வளா்ச்சியடைந்துள்ளன.

மொத்த வாராக்கடன் விகிதம் வரலாறு காணாத அளவாக 1.69 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.33 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் வசூலும் 21.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப். 30 நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மூலதனப் போதுமான விகிதம் (சிஆா்ஏஆா்) 16.89 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகள் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக லாபத்தில் முன்னேற்றம் கண்டு வருவது, நிா்வாகத் தரத்தை வலுப்படுத்தவும், இடா் மேலாண்மையை மேம்படுத்தவும் மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன்மூலம், ‘2047-க்குள் வளா்ந்த பாரதம்’ இலக்கை எட்டுவதற்குப் பொதுத் துறை வங்கிகள் வலுவான பங்களிப்பை வழங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.