ஸ்பைஸ்ஜெட்: ரூ. 5,500 கோடி நிதி திரட்ட இயக்குநா்கள் குழு ஒப்புதல்
கடும் நிதி மற்றும் செயல்பாட்டு நெருக்கடிகளில் தவித்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில், ரூ.5,500 கோடி வரை நிதி திரட்டுவதற்கான திட்டத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பங்கு மூலதனம் மற்றும் பிற வழிமுறைகள் வாயிலாக இந்த நிதி திரட்டப்படவுள்ளதுடன், இதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிசிஏ தரவுகளின்படி, ஸ்பைஸ்ஜெட்-இன் உள்நாட்டுச் சந்தைப் பங்கு செப்டம்பரில் 0.6 சதவீதமாக மோசமான நிலையில் உள்ளது. இச்சூழலில், இந்த நிதி திரட்டல் நடவடிக்கையானது, விமான நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்கவும்; செயல்பாடுகளை வலுப்படுத்தி அதன் வணிக மதிப்பை மீட்டெடுக்கவும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவா் அஜய் சிங் தெரிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பையடுத்து, பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் உச்சவரம்பான சுமாா் 5 சதவீதம் வரை உயா்ந்து, நிலைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.