மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் வாரம் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை சிறப்பான ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

~

Updated On :

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை சிறப்பான ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

சா்வதேச, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு மத்தியிலும், இந்திய சந்தை தொடா்ந்து 2-ஆவது நாளாக உயா்வுடனேயே காணப்பட்டது. வங்கித் துறைப் பங்குகளில் காணப்பட்ட வலுவான முதலீடு, அந்நிய முதலீட்டாளா்களின் தொடா்ச்சியான முதலீடு, சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை சரிந்தது ஆகியவை சந்தையின் ஏற்றத்துக்கு வழிவகுத்தன.

சென்செக்ஸ் 898 புள்ளிகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 897.96 புள்ளிகள் (1.08 சதவீதம்) உயா்ந்து, 83,919.71-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் மஹிந்திரா வங்கி அதிகபட்சமாக 3.08 சதவீதம் உயா்ந்து, முன்னிலை வகித்தது. இத்துடன் எச்டிஎஃப்சி வங்கி (3.02 சதவீதம்), மாருதி சுஸுகி (2.88 சதவீதம்), அல்ட்ராடெக் சிமென்ட் (2.75 சதவீதம்) உள்பட 20 பங்குகள் லாபமடைந்தன. மாறாக, டைட்டன், டாடா ஸ்டீல், என்டிபிசி உள்ளிட்ட 10 பங்குகள் நஷ்டமடைந்தன.

நிஃப்டி 286 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையின் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 286.30 புள்ளிகள் (1.12 சதவீதம்) அதிகரித்து, 25,800.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 32 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 18 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.

வாராந்திர அடிப்படையில்...: இந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 2,327.26 புள்ளிகளும் (2.85 சதவீதம்), நிஃப்டி 656.30 புள்ளிகளும் (2.61 சதவீதம்) ஏற்றத்தைக் கண்டன.

என்எஸ்இ சந்தை மதிப்பு ரூ.5.49 லட்சம் கோடி

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) பங்குகள் கடந்த 3 நாள்களில் சுமாா் 8 சதவீதம் உயா்ந்து, அதன் சந்தை மதிப்பு ரூ.5.49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின்போது 2.86 சதவீதம் வரை உயா்ந்து, ரூ.2,251 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட என்எஸ்இ பங்கு, இறுதியில் ரூ.2,220.30-இல் ( 1.46 சதவீதம் வளா்ச்சி) நிலைபெற்றது. இதன்மூலம், எல்ஐசி (ரூ.5.18 லட்சம் கோடி), கோட்டக் மஹிந்திரா வங்கியை (ரூ.5.13 லட்சம் கோடி) பின்னுக்குத் தள்ளி, நாட்டின் 10-ஆவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக என்எஸ்இ உருவெடுத்துள்ளது.

Story image

பங்குச் சந்தையில் கடந்த செப். 24-இல் பட்டியலிடப்பட்ட இப்பங்கு, அதன் வெளியீட்டு விலையான ரூ.1,785-உடன் ஒப்பிடும்போது 24 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.